Pages

Friday, December 6, 2013

how to use tamil keypad in windows 7

how to use tamil keypad in windows 7
தமிழ் விசைபலகை(tamil keypad
     தமிழ்த் தட்டச்சு முறைகள் என்பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பல்வேறு முறைகளைப் பற்றியதாகும். தமிழில் பல வகையான மென்பொருட்கள் மற்றும் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் விசைப்பலகை அமைப்பு, எழுத்து வகைகள், எழுத்துரு அமைப்புகள் போன்றவைகளும் தனித்தனியாக இருக்கின்றன. இதனால் இணையத்திற்கான தமிழ் எழுத்துருக்களைப் பலரும் தனித்தனியாக அவர்கள் வசதிக்குத் தகுந்தபடி தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்
மென்பெருளை பதிவிறக்கம் செய்ய
    தமிழை உள்ளீடு செய்ய NHM WRITER என்னும்  மென்பெருள் பயன்படுகிறது இதனை பதிவிறக்கம் இங்கு CLICK செய்யவும்.
விசைப்பலகை


  • தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை
    தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை (Tamil type writing key board) எனும் இந்த விசைப்பலகை தட்டச்சு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் முறையைத் தழுவி அமைக்கப்பட்டது. பாமினி, அமுதம், கிருதி தமிழ், மீசன், குறிஞ்சி போன்ற தமிழ் எழுத்துருக்கள் இந்த விசைப்பலகை முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ் 99 விசைப்பலகை
     தமிழ்நாடு அரசு 1999 ஆம் ஆண்டு தமிழ்வலை 99 (Tamilnet 99) எனும் விசைப்பலகை முறையை அறிமுகப்படுத்தியது. தமிழ் தட்டச்சு தெரியாத அனைவரும் எளிதாகப் பார்த்து மாற்று விசையின் உதவியின்றி தட்டச்சு செய்யும் முறையில் இந்த விசைப்பலகை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • உச்சரிப்பு வழி விசைப்பலகை
     அனைத்து மொழிகளையும் பயன்படுத்தும் அச்சுத் தொழில் சார்ந்த துறைகளில் பொதுவான ஒலியியல் குறியீடுகளுக்குத் தகுந்ததாகத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த உச்சரிப்பு வழி விசைப்பலகை (Phonetic key board)அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தமிழில் அதிகம் பயன்படுத்தும் மயிலை எழுத்துருவிற்கான விசைப்பலகை குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.
  • மாற்றுமொழி விசைப்பலகை
    மாற்றுமொழியின் வாயிலாகத் தட்டச்சு செய்யும் வழியில் ஆங்கில எழுத்துச் சேர்க்கையின் மூலம் தமிழ்மொழியைத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த மாற்றுமொழி விசைப்பலகை (Transliteration or Romanised key board) அமைக்கப்பட்டிருக்கிறது.
  • பிற விசைப்பலகைகள்
    இது தவிர எளிமையாகத் தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் சில விசைப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் அமைப்பின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று தனிப்பட்ட விசைப்பலகை முறையை அமைத்துக் கொண்டுள்ளன என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

எழுத்துரு வகைகள் 


      கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் எழுத்துருக்களில் அவை உருவாக்கப்பட்ட அடிப்படையைக் கொண்டு அதன் வகைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் மூன்று வகைகள் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன
  • உண்மை வடிவ எழுத்துரு
    கணிப்பொறியில் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் உண்மை வடிவ எழுத்துருக்கள் (TTF-True Type Font) எனும் வகையிலும், அடோப் வடிவ மேலாளர் (Adobe Type Manager) எனும் வகையிலும் இருக்கின்றன.
  • திறந்த வடிவ எழுத்துரு
     அடோப் மற்றும் மைக்ரோசாஃப்ட் எனும் கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து திறந்த வடிவ எழுத்துருக்கள் முறையை (Open Type Fonts) உருவாக்கியிருக்கின்றன. இந்த எழுத்துருக்கள் பல இயக்கச் சூழல்களிலும் இயங்குவதால் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. ஆங்கிலம் இல்லாத கூட்டெழுத்து, வரிவடிவ எழுத்துக்களை உடைய மொழிகளுக்கு இந்த எழுத்துருக்கள் சிறந்ததாக இருக்கிறது.
  • ஒருங்குறி எழுத்துரு
    உலகம் முழுவதும் அனைத்து மொழிகளையும் ஒன்றிணைக்க ஒருங்குறி ஒருங்குறி கூட்டமைப்பு (Unicode Consortium) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் பல நாடுகளும், கணிப்பொறி நிறுவனங்களும் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். இந்த அமைப்பின் தரப்படுத்தப்பட்ட எழுத்துருவாக ஒருங்குறி எழுத்துருக்கள் (Unicode Font) இருக்கின்றன. தமிழ் மொழிக்கும் இந்த ஒருங்குறி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • பிற எழுத்துருக்கள்
    இது தவிர அச்சுப் பணிகளுக்குத் தகுந்ததாக திறந்த உண்மை வடிவ எழுத்துருக்கள் (Open True Type Fonts) மற்றும் கணிப்பொறித் திரையில் துல்லியமாகப் பார்க்கத் தகுந்ததாக தெளிவு வடிவ எழுத்துரு (Clear Type Font) போன்றவைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.

பயன்பாடு 


     தமிழ் எழுத்துருக்களில் மாற்று மொழி விசைப்பலகை மூலம் அம்மா (ammaa) என்று தட்டச்சு செய்வது எளிதாக இருப்பதால் இந்த விசைப்பலகையைப் பயன்படுத்தியுள்ள எழுத்துருக்களைத் தட்டச்சு செய்ய அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் தமிழ்நெட்-99 எழுத்துருவைப் பயன்படுத்துகின்றனர்.

ஒருங்குறி அமைப்பு எழுத்துருக்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கணிப்பொறியில் புதிய இயக்கச் செயலிகளை நிறுவியிருந்தால் குறிப்பிட்ட எழுத்துருவை நிறுவாவிட்டாலும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. எனவே ஒருங்குறி எழுத்துருவை பயன்படுத்தும் வழக்கம் இப்போது தமிழ் இணைய தளங்களில் அதிகரித்திருக்கிறது.



No comments:

Post a Comment